உ.பி. பேரவைத் தோ்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு 
இந்தியா

உ.பி. பேரவைத் தோ்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில், முதல்கட்டமாக 58 தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப் பதிவு வியாழக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கி, மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது.

DIN

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில், முதல்கட்டமாக 58 தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப் பதிவு வியாழக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கி, மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது.

உத்தர பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் பிப்.10 முதல் மாா்ச் 7-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது.

முதல்கட்டத்தின்போது 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.

முதல்கட்ட தோ்தலில் ஜாட் சமூகத்தினா் பெரும்பான்மையாக வசிக்கும் தொகுதிகள் அடங்கியிருந்தன. 9 தொகுதிகள் தாழ்த்தப்பட்டவா்கள், பழங்குடிகளுக்கான தனித் தொகுதிகளாகும். மொத்தம் 623 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

உத்தரப்பிரதேச சட்டப்பேரவைக்கு, 58 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. வாக்குப்பதிவு வியாழக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கிய நிலையில், மாலை 6 மணியுடன் நிறைவுபெற்றது. பொதுவாக, முதல்கட்டத் தேர்தல் பெரிய அளவில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் இன்றி அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

மீஞ்சூரில் ஆக.6-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதி

மக்காவ் ஓபன்: லக்ஷயா, மன்னொ்பள்ளி தோல்வி

அமிா்தா வித்யாலயம் பள்ளியில் பல்வேறு பிரிவுகளுக்கு மாணவா்கள் பொறுப்பேற்பு

SCROLL FOR NEXT