யோகி ஆதித்யநாத் 
இந்தியா

உங்கள் வாக்குகளைக் கேட்க வரவில்லை: திரும்ப திரும்ப கூறிய யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், அந்த மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒரு விடியோவை வெளியிட்டார்.

DIN


லக்னௌ: உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், அந்த மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒரு விடியோவை வெளியிட்டார்.

வாக்களிக்கும் சகோதர சகோதரிகளே என்று தொடங்கும் 6 நிமிட விடியோவில், யோகி ஆதித்யநாத், உங்கள் வாக்குகளை கேட்க இங்கு வரவில்லை என்று திரும்ப திரும்பக் கூறியுள்ளார்.

ஒரு மிகப்பெரிய முடிவை எடுக்கும் நேரம் இது. நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை மனதில் கொண்டு, இரட்டை எஞ்ஜின் கொண்ட பாஜக அரசு கடந்த 5 ஆண்டுகளில், பல்வேறு திட்டங்களை பொறுப்புடன், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி முடித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகள் பல விஷயங்கள் நடந்துள்ளன. முதல் முறையாக, கிராமங்களில் 24 மணி நேரமும் மின்சாரம் என்ற இலக்கு அடையப்பட்டுள்ளது என்று பாஜக ஆட்சி நிறைவேற்றிய பல திட்டங்களை பட்டியலிட்டார். 

பிறகு, நான் இங்கு உங்களது வாக்குகளைக் கேட்க வரவில்லை. இந்த நலத்திட்டங்களையெல்லாம் செய்யாத கடந்த அரசுகளின் சார்பாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்  என்று கூறியிருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT