மாநிலங்களவையில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 
இந்தியா

மாநிலங்களவை மார்ச் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்டம் முடிவடைந்ததை அடுத்து நாடாளுமன்ற மாநிலங்களவை மார்ச் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

DIN

பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்டம் முடிவடைந்ததை அடுத்து நாடாளுமன்ற மாநிலங்களவை மார்ச் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

நடப்பு ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன.31 ஆம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 1 ஆம் தேதி 2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து இரு அவைகளிலும் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வந்தது. 

கடந்த வாரங்களில் நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று மக்களவையில் பதில் அளித்தார். இதையடுத்து, மாநிலங்களவையில் இன்று காலை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். இதையடுத்து மாநிலங்களைவை வருகிற மார்ச் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அவையின் துணைத் தலைவர் ஸ்ரீ ஹரிவன்ஷ் அறிவித்தார். 

முதல்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று(பிப்.11) முடிவடைகிறது. மார்ச் 14 ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 8 ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூரியின் மண்டாடி சிறப்பு போஸ்டர் வெளியீடு!

ஜம்மு - காஷ்மீர் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு!

வரதட்சிணைக்காக மனைவியை எரித்துக் கொன்ற தலைமைக் காவலர் கைது!

இளமை வானிலே... பார்த்திபா!

அன்பின் நிமித்தம்... ராஷி சிங்!

SCROLL FOR NEXT