முகப்பு
இந்தியா

இந்தியாவில் புதிதாக 44 ஆயிரம் பேருக்கு கரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 44,877 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:23 AM
கோப்புப்படம்
பகிர்:


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 44,877 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் கரோனா பாதிப்பு தரவுகள் குறித்த செய்திக் குறிப்பை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்படும் தினசரி விகிதம் 3.17 சதவிகிதம்.

மேலும் 1,17,591 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 4,15,85,711 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்றைய நிலவரப்படி 5,37,045 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தடுப்பூசி:

இதுவரை மொத்தம் 172.81 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.