முகப்பு
இந்தியா

3 மாநிலங்களின் பேரவைத் தேர்தல்: பிற்பகல் 3 மணி வாக்குப்பதிவு நிலவரம்

கோவா, உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய 3 மாநில சட்டப்பேரவைகளுக்கான பகல் 3 மணி வாக்குப்பதிவு நிலவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:24 AM
பிற்பகல் 3 மணி வாக்குப்பதிவு நிலவரம்
பகிர்:

கோவா, உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய 3 மாநில சட்டப்பேரவைகளுக்கான பகல் 3 மணி வாக்குப்பதிவு நிலவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

உத்தரகண்டின் 70 தொகுதிகளுக்கும், கோவாவின் 40 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கியது. அதேபோல,  உத்தர பிரதேசத்தில் இரண்டாம் கட்டமாக 55 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இன்று பிற்பகல் 3 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கோவாவில் 60.18%, உத்தரகண்டில் 49.24%, உத்தரப் பிரதேசத்தில் 51.93% வாக்காளர்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

சட்டப்பேரவைகளுக்கான வாக்குப்பதிவுகள் மாலை 6 மணிவரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →