இந்தியா

மறைந்த ராணுவ வீரரின் வீட்டில் உணவருந்தி ராஜ்நாத் சிங் ஆறுதல்

DIN

கார்கில் போரில் இறந்த ராணுவ வீரரின் வீட்டில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது குடும்பத்துடன் மதிய உணவருந்தினார். அவருடன் ராணுவ உயர் அதிகாரிகளும் உடன் இருந்தனர். 

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மணிப்பூர் மாநிலத்தின் தலைநகர் இம்பாலுக்கு ராஜ்நாத் சிங் பயணம் மேற்கொண்டார். 

அங்குள்ள குருத்வாரா கோயிலைப் பார்வையிட்டு சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் கார்கில் போரில் முக்கியப் பங்காற்றி உயிரிழந்த ராணுவ வீரர் யும்நாம் கலிஷோர் கோமின் இல்லத்திற்குச் சென்றார். 

அங்கு அவரது குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்து நலம் விசாரித்தார். அவர்கள் குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளைக் கேட்டறிந்த ராஜ்நாத் சிங், அவர்களுடன் அமர்ந்து மதிய உணவு உண்டார். 

இது தொடர்பாக தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ள ராஜ்நாத் சிங், மறைந்த ராணுவ வீரர் கலிஷோர் கோமின் இல்லத்தில் உணவருந்தியது மகிழ்வான தருணம். மணிப்பூர் மக்களின் விருந்தோம்பல் அனைவரையும் ஈர்க்கக்கூடியது மற்றும் போற்றத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

கனமழை எதிரொலி: கென்யாவில் மேலும் ஒரு வாரத்திற்கு பள்ளிகள் விடுமுறை!

டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்து அணி அறிவிப்பு

SCROLL FOR NEXT