கேரள கல்லூரியில் அரங்கேறிய காதலர் தினக் கொண்டாட்டம்
கேரள மாநிலம் கொச்சியிலுள்ள சட்டக் கல்லூரியில் மாணவர்கள் ஆட்டம் பாட்டத்துடன் காதலர் தினத்தைக் கொண்டாடினர். அந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
கேரள மாநிலம் கொச்சியிலுள்ள சட்டக் கல்லூரியில் மாணவர்கள் ஆட்டம் பாட்டத்துடன் காதலர் தினத்தைக் கொண்டாடினர். அந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. காதலர் தினத்தையொட்டி பலர் தங்களது இணையருடன் இணைந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
படிக்க | பல்லக்கில் வந்து ஜனநாயகக் கடமையாற்றிய முதியவர்கள்
Advertisement
திருமணமானவர்களும் தங்களது துணையருடன் இணைந்து காதலர் தினக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரிகளில் இளைஞர்களும் பலர் ஆச்சரியங்களைக் கொடுத்து காதலை வெளிப்படுத்தினர்.
அந்தவகையில், கேரள மாநிலம் கொச்சியிலுள்ள சட்டக் கல்லூரியில் காதலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாணவர்கள், மாணவிகள் பாரம்பரிய முறைப்படி ஆடை அணிந்து ஆட்டம் பாட்டத்துடன் காதலர் தின மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
காதல் என்ற வார்த்தை பொதுவானது. உயிர்களிடம் அன்பு செலுத்தும் அனைவரும் அந்த சொல்லைப் பயன்படுத்தலாம் என்ற அடிப்படையில் இந்த கல்லூரி மாணவர்களின் கொண்டாட்டம் அமைந்தது.