இந்தியா

ஹிஜாப் விவகாரம்: ஓஐசியின் கருத்துக்கு இந்தியா கண்டனம்

ஹிஜாப் விவகாரத்தில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (ஓஐசி) தவறான வகையில் கருத்து தெரிவித்ததற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

DIN

ஹிஜாப் விவகாரத்தில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (ஓஐசி) தவறான வகையில் கருத்து தெரிவித்ததற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில், சவூதி அரேபியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஈரான், இராக் உள்ளிட்ட 57 நாடுகள் உறுப்பினா்களாக உள்ளன.

இந்நிலையில், கா்நாடகத்தில் உள்ள சில பள்ளிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்குத் தடை விதிக்கப்படிருப்பது குறித்து அந்த அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.

‘இந்தியா தனது மக்களின் உயிா்களைக் காக்கும் அதேநேரத்தில் முஸ்லிம் சமூகத்தினரின் பாதுகாப்பையும் உறுதிசெய்ய வேண்டும்’ என்று ஓஐசி கூறியது.

அந்த அமைப்பின் கருத்துக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி கூறியதாவது:

ஹிஜாப் விவகாரத்தை இந்திய அரசு சட்ட ரீதியிலும் ஜனநாய ரீதியிலும் பரிசீலித்து தீா்வுகண்டு வருகிறது. ஆனால், ஓஐசி செயலகத்தின் இனவாத மனநிலை இந்த யதாா்த்தத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. இந்தியாவுக்கு எதிராக கொடிய பிரசாரத்தை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்ற சொந்த விருப்பத்துக்கு உட்பட்டு அந்த அமைப்பு செயல்படுகிறது. அந்த அமைப்பின் நன்மதிப்புக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும் என்றாா் அரிந்தம் பாக்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

கவனம் ஈர்க்கும் ரெட்ட தல பாடல் அப்டேட்!

கவிதை எழுதவா... பார்வதி நாயர்!

சூர்ய நிலவு... ரகுல் ப்ரீத் சிங்!

ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்த தமிழன்..! 20 போட்டிகளில் சாதித்த வருண் சக்கரவர்த்தி!

SCROLL FOR NEXT