முகப்பு
இந்தியா

பிகாரில் உயிருடன் எரிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் உயிரிழப்பு

பிகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் பிப்ரவரி 10-ம் தேதி உயிருடன் எரிக்கப்பட்ட 8 மாத கர்ப்பிணி பெண் பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். 

Updated On : 15 பிப்ரவரி, 2022 at 2:36 PM
பகிர்:

பிகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் பிப்ரவரி 10-ம் தேதி உயிருடன் எரிக்கப்பட்ட 8 மாத கர்ப்பிணி பெண் பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். 

சஞ்சய்ஜா மற்றும் சிவகுமார்ஜா ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட சொத்து தகராறே இந்த சம்பவத்திற்கு காரணம் என காவல்துறையினர் தெரிவித்தனர். 

முன்னாள் நகர காவல் நிலையத்திற்கு உள்பட்ட ஜேஎம் சாலையில் உள்ள பழைய வீட்டில் சஞ்சய் ஜா தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.

Advertisement

கடந்த பிப். 10-ம் தேதி மாலை சிவகுமார் ஜா ஒரு குழுவினருடன் மண் அள்ளும் இயந்திரத்துடன் (ஜேசிபி) சஞ்சய் ஜாவின் வீட்டை இடிக்க வந்தார். இதை அவரும் அவரது குடும்பத்தினரும் கடுமையாக எதிர்த்தனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், கர்ப்பிணி பெண் உள்பட நால்வர் மீது தீ வைத்து உயிருடன் எரிக்கப்பட்டது. 

கர்ப்பிணி பெண்ணான பிங்கி உள்பட நால்வர் எரிக்கப்பட்ட காட்சி அங்கிருந்தோர் செல்போனில் பதிவு செய்தனர். 

பாதிக்கப்பட்டவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு தர்பங்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர், அவர்கள் மேல் சிகிச்சைக்காக பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

இந்நிலையில் உயிருடன் எரிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். பிங்கியின் சகோதரர் சஞ்சீவ் ஜாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட மற்ற இருவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முக்கிய குற்றவாளியான சிவகுமார்ஜா தற்போது தலைமறைவாக உள்ளார். இவரைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.