முகப்பு
இந்தியா

சபரிமலை பக்தர்கள் வந்த வாகனம் விபத்து: 3 பேர் பலி

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் வந்த வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் ஐயப்ப பக்தர்கள் 3 பேர் பலியாகினர். 9 பேர் படுகாயமடைந்தனர்.

Updated On : 15 பிப்ரவரி, 2022 at 2:42 PM
சபரிமலை பக்தர்கள் வந்த வாகனம் விபத்து: 3 பேர் பலி
பகிர்:


கோழிக்கோடு: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் வந்த வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் ஐயப்ப பக்தர்கள் 3 பேர் பலியாகினர். 9 பேர் படுகாயமடைந்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர் விபத்து குறித்து கூறுகையில், ஐயப்ப பக்தர்கள் வந்த வேன் ஓட்டுநர், தூக்க கலக்கத்தில் இருந்ததால், வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வாகனங்கள் வரும் சாலையின் குறுக்கே வந்தபோது, எதிரே வந்த லாரி மீது மோதியது தெரிய வந்துள்ளது.

இந்த விபத்தில் வேன் ஓட்டுநர் மற்றும் 30 வயதுடைய இரண்டு ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 9 பேர் காயமடைந்தனர். சிலர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை 5 மணியளவில் இந்த விபத்து நேரிட்டுள்ளது.  விபத்தில் சிக்கியவர்கள் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், இவர்கள் சபரிமலைக்கு வரும் போது இந்த விபத்து நேரிட்டதும் தெரிய வந்துள்ளது.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.