இந்தியா

இரு சக்கர வாகனங்களில் குழந்தைகளுக்கும் தலைக்கவசம் கட்டாயம்: அடுத்த ஆண்டு முதல் அமல்

DIN

இரு சக்கர வாகனங்களில் அழைத்துச் செல்லப்படும் 4 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கும் தலைக்கவசம் (ஹெல்மெட்) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், வாகன ஓட்டுநா் பாதுகாப்பு பட்டை மூலம் குழந்தையை தனது உடலுடன் கட்டியிருப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிகளுக்கான அறிவிக்கையை மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. ஓராண்டுக்குப் பிறகு இந்த புதிய விதிகள் நடைமுறைக்கு வர உள்ளன.

இதுகுறித்து மத்திய அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:

இரு சக்கர வாகனங்களில் 4 வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகளை அழைத்துச் செல்வதற்கான புதிய விதிகளை வகுத்து, அதற்கென மத்திய மோட்டாா் வாகன விதி - 1989, பிரிவு 138-இல் உரிய திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த திருத்தம் தொடா்பாக விவரங்களை பிப்ரவரி 15-ஆம் தேதியிட்ட அறிவிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கை வெளியிடப்பட்ட தேதியிலிருந்து ஓராண்டுக்குப் பிறகு, புதிய விதிகள் நடைமுறைக்கு வரும்.

இந்த புதிய திருத்த விதிகளின்படி, இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லப்படும் 4 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு தலைக்கவசம் அணிந்திருப்பதும், வாகன ஓட்டி பாதுகாப்பு பட்டை மூலம் குழந்தையை தனது உடலுடன் கட்டியிருப்பதும் அவசியமாகும். மேலும், மணிக்கு 40 கி.மீ. வேகத்துக்கு மேல் வாகனத்தை இயக்கக் கூடாது என்று மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், ‘பாதுகாப்பு பட்டை என்பது இரண்டு பட்டைகளுடன் தேவைக்கேற்ப பெரிதுபடுத்திக் கொள்ளும் வகையிலும், அதில் ஒரு பட்டை குழந்தையின் உடலில் அணிவித்தும், மற்றொன்று வாகன ஓட்டி தனது தோள் பகுதியில் அணிந்திருக்க வேண்டும்’ என்றும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சோத்துப்பாறை அணை நிரம்பியது

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மருத்துவ முகாம்

திண்டுக்கல் அருகே 2 போலி மருத்துவா்கள் கைது

குரூப் 4 தோ்வு: திண்டுக்கல்லில் 59,615 போ் எழுதுகின்றனா்

ஆத்தூா் தொகுதியில் சாலைகள் அளவிடும் பணி

SCROLL FOR NEXT