முகப்பு
இந்தியா

வருமான வரி செலுத்துவோருக்கு ரூ.1.71 லட்சம் கோடி திருப்பி அளிப்பு

வருமான வரி செலுத்துவோருக்கு நடப்பு நிதியாண்டில் இதுவரையில் ரூ.1.71 லட்சம் கோடி திரும்ப அளிக்கப்பட்டதாக (ரீஃபண்ட்) வருமான வரி (ஐடி) துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:25 AM
வருமான வரித் துறை
பகிர்:

புது தில்லி: வருமான வரி செலுத்துவோருக்கு நடப்பு நிதியாண்டில் இதுவரையில் ரூ.1.71 லட்சம் கோடி திரும்ப அளிக்கப்பட்டதாக (ரீஃபண்ட்) வருமான வரி (ஐடி) துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 14ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில், சுமார் 2 கோடி வருமான வரி செலுத்துவோருக்கு, ரூ.1.71 லட்சம் கோடி திருப்பியளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நடப்பு நிதியாண்டில் (ஏப்ரல் 1, 2021) முதல் பிப்ரவரி 14ஆம் தேதி வரையில் வரி செலுத்தும் 1.97 கோடி பேருக்கு ரூ.1,71,555 கோடி வருமான வரி ரீஃபண்டாக திரும்ப அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

வருமான வரி ரீஃபண்டாக 1,95,17,945 நிறுவனங்களுக்கு ரூ.63,234 கோடி வழங்கப்பட்டுள்ளது. பெருநிறுவன வரி ரீஃபண்ட் பிரிவில் 2.28 லட்சம் பேருக்கு ரூ.1,08,322 கோடி வழங்கப்பட்டதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments