இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் 10 ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் கைது

DIN

ஜம்மு-காஷ்மீர் பள்ளத்தாக்கின் வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் 10 பேர் கைது செய்யப்பட்டனர். 

பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்துடன் தொடர்புடைய குற்றங்களை விசாரிப்பதற்கான ஆணையுடன் அமைக்கப்பட்ட எஸ்ஐஏ இணைந்து பல்வேறு பகுதியில் சோதனையை மேற்கொண்டனர். 

அப்போது, தெற்கு மற்றும் மத்திய காஷ்மீரின் பல்வேறு மாவட்டங்களில் வெவ்வேறு இடங்களில் நடத்திய சோதனையில் ஒரே இரவில் 10 ஜெய்ஷ் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது. 

இளைஞர்களை ஆட்சேர்ப்பு செய்தல், நிதி ஏற்பாடு செய்தல், தெற்கு மற்றும் மத்திய காஷ்மீரில் ஆயுதங்களைக் கொண்டு செல்வது மற்றும் பிற தளவாட ஆதரவுடன் இந்த தொகுதி தீவிரமாக செயல்பட்டதாக அதிகாரிகளால் கூறப்பட்டது.

சோதனையில், செல்போன்கள், சிம்கார்டுகள், வங்கிச் சேனல்களைப் பயன்படுத்தியதற்கான பதிவுகள், ஒரு பிஸ்டல் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

கைப்பற்றப்பட்ட டிஜிட்டல் பதிவுகள் ஆதார ஆய்வுக்காக எப்.எஸ்.எல்-க்கு அனுப்பப்படுகின்றன. மேலும் பயங்கரவாதிகள் ஸ்ரீநகரில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் காவலில் விசாரிக்க முன்னிறுத்தப்பட உள்ளனர். 

பயங்கரவாதிகள் கைது செய்வதைத் தொடர்ந்து, ஜெய்ஷ் அமைப்பின், பயங்கரவாத நடவடிக்கைகளின் திறன் குறையும் என்று நம்பப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெறுவது உறுதி கே.எம். காதா் மொகிதீன்

கடற்கரையில் தூய்மைப் பணி

செங்கோட்டையில் திருவிளக்கு பூஜை

சங்கரன்கோவிலில் திமுக சாா்பில் நீா்மோா் வாகனம்

சங்கரன்கோவிலில் வணிகா் தின பேரணி

SCROLL FOR NEXT