இந்தியா

ராஜஸ்தானில் கட்டுப்பாடுகள் முழுமையாகத் தளர்வு: 1 முதல் 5 வரை பள்ளிகள் திறப்பு

DIN

ராஜஸ்தானில் கரோனாவின் மூன்றாவது அலை தணிந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து கட்டுப்பாடுகளையும் முழுவதுமாக அம்மாநில அரசு தளர்த்தியுள்ளது. 

பிப்ரவரி 14 அன்று அறிவிக்கப்பட்ட சமீபத்திய வழிகாட்டுதல்களின்படி, 

1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதேசமயம் பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக மாணவர்கள் பள்ளிக்கு அழைக்கப்பட மாட்டார்கள். அவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும். 

முன்னதாக 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் ஏற்கனவே திறக்கப்பட்டன.

புதிய வழிகாட்டுதல்கள் புதன்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, திருமண நிகழ்ச்சிகளுக்கு கூட்டம் கூடுவதைத் தவிர்க்கவேண்டும் என்ற கட்டுப்பாடுகளை தற்போது தளர்த்தியுள்ளது. 

மேலும், கேளிகைகள், உணவகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், திரையரங்குகள் மீதான கட்டுப்பாடுகளையும் மாநில அரசு நீக்கியுள்ளது. அவை அனைத்தும் 100 சதவீதம் முழுமையாகச் செயல்பட அனுமதி அளித்துள்ளது. 

இருப்பினும், வெளிநாடுகளில் பயணம் செய்பவர்கள், கல்வி கற்பவர்கள் ஏழு நாட்கள் வீட்டுத்தனிமையில் இருப்பது அவசியம். அவர்கள் RT-PCR சோதனை கட்டாயம் செய்துகொள்ளவேண்டும். சோதனையில் நெகட்டிவ் வந்தவுடன், அவர்களின் தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிவடையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: ஜூலை 10-க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு ஜூலை 10-க்கு ஒத்திவைப்பு!

கோபா அமெரிக்காவின் தீம் பாடல்!

அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை!

எங்கே செல்கிறார் சோபிதா?

SCROLL FOR NEXT