தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் 
இந்தியா

தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள்: தமிழில் வாழ்த்துச் சொன்ன பிரதமர்

பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் தாத்தா உ. வே. சாமிநாத ஐயரின் பிறந்தநாளை முன்னிட்டு, சுட்டுரைப் பக்கத்தில் தமிழில் வாழ்த்துச் சொல்லியிருக்கிறார்.

DIN


தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயரின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் இன்று பல்வேறு வகைகளில் கொண்டாடப்படுகிறது.

தமிழ்த் தாத்தாவை நினைவுகூரும் வகையில், தமிழ் அமைப்புகள் சார்பில் நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். அவரது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

இதையும் படிக்க.. திண்ணைப் பள்ளி அனுபவம்

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் தாத்தா உ. வே. சாமிநாத ஐயரின் பிறந்தநாளை முன்னிட்டு, சுட்டுரைப் பக்கத்தில் தமிழில் வாழ்த்துச் சொல்லியிருக்கிறார்.

அவரது சுட்டுரைப் பதிவில், 
தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத ஐயரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை நினைவு கூர்கிறேன். தமிழ் கலாசாரம் மற்றும் மொழிக்காக அவர் ஆற்றிய அரும்பணிக்காக போற்றப்படுபவர், சங்க கால இலக்கியங்களை மக்களிடம் கொண்டு சேர்த்ததுடன் உன்னதமான பாரம்பரியத்தை கட்டிக்காக்க பங்களிப்பு செய்தவர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இளைய சமுதாயத்தினர் அவரது ஒப்பிலா படைப்புகளை வாசிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார் பிரதமர் மோடி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2026 தேர்தலில் இபிஎஸ் தான் முதல்வர்: நயினாா் நாகேந்திரன்

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

SCROLL FOR NEXT