முகப்பு
கோப்புப்படம்
இந்தியா

தோண்டி எடுக்கப்பட்ட பெண்ணின் உடல்...வரதட்சிணை புகாரால் வழக்கில் திருப்பம் 

வெள்ளிக்கிழமை பெண்ணின் உடல் தோண்டி எடுக்கப்பட்ட பிறகு, உடற்கூறாய்வுக்காக அனுப்பப்பட்டது.

இந்தியா

தோண்டி எடுக்கப்பட்ட பெண்ணின் உடல்...வரதட்சிணை புகாரால் வழக்கில் திருப்பம் 

வெள்ளிக்கிழமை பெண்ணின் உடல் தோண்டி எடுக்கப்பட்ட பிறகு, உடற்கூறாய்வுக்காக அனுப்பப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:27 AM
கோப்புப்படம்
பகிர்:

உத்தரப் பிரதேசம் முசாபர்நகரில் புதைக்கப்பட்ட பெண்ணின் உடல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. வரதட்சிணை புகார் எழுந்ததையடுத்து உடல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அலுவலர் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விரிவாக பேசிய காவல்துறை அலுவலர், "மகியாலி கிராமத்தில் வசித்துவரும் அப்பெண்ணின் குடும்பத்தை சேர்ந்த குலிஸ்தா பேகம் என்பவர் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், வரதட்சிணையாக 2 லட்சம் ரூபாய் மற்றும் மோட்டார் சைக்கிள் கேட்டுள்ளனர். இதையடுத்து, அவரது மாமியாரால் அடித்துக் கொல்லப்பட்டார். பிப்ரவரி 14ஆம் தேதி அவரது உடல் புதைக்கப்பட்டது. உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்" என்றார்.

இதையடுத்து, அவரது கணவர் உள்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். 

கடந்த 2015ஆம் ஆண்டு, குலிஸ்டா பேகம் மிர் ஹாசனை திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →