இந்தியா

மாற்றுத்திறனாளிக்கு செயற்கைக் கால் அணிய உதவிய மத்திய அமைச்சர் 

DIN

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மாற்றுத்திறனாளி ஒருவருக்கு செயற்கைக் கால் அணிய உதவிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மும்பையில் உள்ள அகில இந்திய உடல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வு நிறுவனத்துக்கு இன்று காலை சென்றார். அப்போது மாற்றுத்திறனாளி ஒருவருக்கு செயற்கைக் கால் அணிய அவர் உதவி செய்தார். 
இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில், "இன்று, எனது மும்பை பயணத்தின் போது, ​​அகில இந்திய உடல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வு நிறுவனத்திற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, ​​ஒரு சிறப்புத் திறனாளி ஒருவருக்கு செயற்கைக் கருவி அணிய உதவியுள்ளேன்.

இது என் வாழ்வில் மறக்க முடியாத தருணமாக அமைந்தது". என்று மாண்டவியா கூறினார். அத்துடன் ட்வீட் செய்து ஒரு படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். மன்சுக் மாண்டவியா, இரண்டு நாள் பயணமாக மும்பைக்கு நேற்று சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT