இந்தியா

பள்ளிகளில் நேரடி பொதுத் தேர்வு: எதிர்த்த வழக்கை விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்

IANS


புது தில்லி; நாடு முழுவதும் அனைத்து மாநில பாடத்திட்டங்களிலும் சிபிஎஸ்இ உள்ளிட்ட பாடத்திட்டங்களிலும் பயிலும் பத்து மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடியாக பொதுத் தேர்வு நடத்துவதை எதிர்த்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன்பு, வழக்குரைஞர் பிரசாந்த் பத்மநாபன், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்குமாறு கோரிக்கை வைத்தார்.

மேலும், கரோனா பேரிடர் காரணமாக நேரடி வகுப்புகள் நடத்தப்படாத நிலையில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி பொதுத் தேர்வு நடத்தப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த வழக்கை, ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான அமர்வு விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. இது தொடர்பான வழக்கை கடந்த ஆண்டும், இதே அமர்வு விசாரித்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT