பஜ்ரங் தள் ஆர்வலர் கொலை குற்றவாளியைத் தூக்கிலிட வேண்டும்: சித்தராமையா
பஜ்ரங் தள் ஆர்வலர் கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியைத் தூக்கிலிட வேண்டும் என கர்நாடக எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பஜ்ரங் தள் ஆர்வலர் கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியைத் தூக்கிலிட வேண்டும் என கர்நாடக எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம், ஷிவமொகாவில் நேற்று இரவு 9 மணியளவில் பஜ்ரங் தள் ஆர்வலர் ஹர்ஷா(26) மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஷிவமொகா நகரில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவுதால் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
இதையும் படிக்க- முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு மீதான வழக்கு ரத்து
இதற்கிடையில், சிவமொக்கா நகரில் உள்ள சீகேஹத்தி பகுதியில் மர்ம நபர்கள் சிலர் வாகனங்களுக்கு தீவைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, இந்த சம்பவத்தை கண்டிக்கிறேன். ஈஸ்வரப்பா, எடியூரப்பா ஷிமோகா ஆகியோர் வசித்து வரும் ஷிமோகா மாவட்டத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வன்முறைக்கு பொறுப்பு ஏற்று உள்துறை அமைச்சர் ஞானேந்திரா பதவி விலக வேண்டும். குற்றவாளியைத் தூக்கிலிட வேண்டும் என்றார். இதனிடையே நேற்றிரவு தொடங்கிய விசாரணையில் இந்த சம்பவம் தொடர்பாக சில தகவல்கள் கிடைத்துள்ளதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.