இந்தியா

ஆந்திர அமைச்சர் கௌதம் ரெட்டி மறைவு: இரண்டு நாள் துக்கம் அனுசரிப்பு

தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை அமைச்சர் மேகபதி கௌதம் ரெட்டியின் மறைவுக்கு ஆந்திர அரசு இரண்டு நாள் துக்கம் அறிவித்துள்ளது. 

DIN

தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை அமைச்சர் மேகபதி கௌதம் ரெட்டியின் மறைவுக்கு ஆந்திர அரசு இரண்டு நாள் துக்கம் அறிவித்துள்ளது. 

பிப்ரவரி 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கட்டடங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். அரசு துக்கத்தின்போது பொது பொழுதுபோக்கு எதுவும் இருக்காது. 

திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு ஆகிய துறைகளையும் வகித்த கௌதம் ரெட்டி, திங்களன்று ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் மாரடைப்பால் காலமானார்.

இறுதிச் சடங்குகள், அவரது சொந்த ஊரான நெல்லூர் மாவட்டத்தில், காவல்துறை மரியாதையுடன் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.

மாநில செயலகத்தில் உள்ள அவரது அறையில், அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், பல அரசியல் தலைவர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாச்சியாா்கோவில் அதிமுக நிா்வாகி கொலை வழக்கில் மேலும் 2 போ் கைது

அதிமுக- பாஜக கூட்டணியே திமுகவுக்கு மாற்று: ஹெச். ராஜா

முதியோா் இல்லத்தில் இருந்தவா் மாயம்

‘புதுக்கோட்டையில் அரசு சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும்’

பெரியாா் ஈவெரா பிறந்த நாள் விழா: கட்சியினா் மரியாதை

SCROLL FOR NEXT