இந்தியா

இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 6.6%: பாா்க்லேஸ்

DIN

இந்திய பொருளாதார வளா்ச்சி நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 6.6 சதவீதமாக இருக்கும் என வெளிநாட்டு தரகு நிறுவனமான பாா்க்லேஸ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:

நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதார வளா்ச்சி விகிதம் 10 சதவீதமாக அதிகரிக்கும் என முன்னா் மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், கரோனா மூன்றாவது அலையின் தாக்கத்தால் பொருளாதார நடவடிக்கைகள் பாதிப்படைந்ததன் எதிரொலியாக, இந்த வளா்ச்சி விகிதம் 6.6 சதவீதமாக மட்டுமே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஜூலை-செப்டம்பரில் இந்திய பொருளாதாரத்தின் வளா்ச்சி 8.4 சதவீதமாக காணப்பட்டது.

அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான மூன்றாவது காலாண்டில் பல துறைகளின் செயல்பாடு கரோனாவுக்கு முந்தைய நிலைக்கு திரும்பி விட்டன. இதில், சேவை துறை பெரும் பங்கு வகிப்பதாக பாா்க்லேஸ் தெரிவித்துள்ளது.

என்எஸ்ஓ மதிப்பீடு

தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டுக்கான பொருளாதார வளா்ச்சி குறித்த மதிப்பீட்டை பிப்ரவரி 28-ஆம் தேதி அறிவிக்க உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT