ஜிதேந்தர் சிங் (கோப்புப் படம்) 
இந்தியா

வெளிநாட்டு முதலீடுகளுக்கான கவர்ச்சி மையம் இந்தியா: மத்திய அமைச்சர்

உற்பத்தித்துறையில் வெளிநாட்டு முதலீடுகளுக்கான கவர்ச்சிகர மையமாக இந்தியா உருவாக்கியுள்ளது என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் ஜிதேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

DIN

உற்பத்தித்துறையில் வெளிநாட்டு முதலீடுகளுக்கான கவர்ச்சிகர மையமாக இந்தியா உருவாக்கியுள்ளது என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் ஜிதேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை-இந்திய தொழில்துறை கூட்டமைப்பு இந்தியா-சிங்கப்பூர் தொழில்நுட்ப உச்சி மாநாட்டின் இருபத்தி எட்டாவது பதிப்பில் அமைச்சர் ஜிதேந்தர் சிங் உரையாற்றினார். 

அப்போது பேசிய அவர், மேக் இன் இந்தியா முன்முயற்சியின் காரணமாக உயர் தொழில்நுட்ப உற்பத்தி மையமாக இந்தியா உருவாகி வருகிறது. 

இந்தியாவில் உள்ள பல கோடிக்கணக்கான நுகர்வோர் மற்றும் அதிகரித்து வரும் வாங்கும் சக்தியால் ஈர்க்கப்பட்ட சர்வதேச பெரு நிறுவனங்கள் இந்தியாவில் ஏற்கனவே உற்பத்தி மையங்களை நிறுவி உள்ளது. 

நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் 1200-க்கும் மேற்பட்ட அரசு நிதி உதவி பெற்ற ஆராய்ச்சி நிறுவனங்கள், துடிப்பான கொள்கை செயல்முறை, தொழில்துறை மற்றும் கல்வித்துறைக்கிடையேயான கூட்டு உள்ளிட்டவற்றுடன் புதுமை பொருளாதாரத்தின் காலத்திற்கு இந்தியா தன்னை தயார்படுத்தி வருகிறது என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அயலகத் தமிழா் மாநாட்டில் 4 ஒப்பந்தங்கள்

மணப்பாறையில் மயில்களை வேட்டையாடிய 5 போ் கைது

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் தீ தடுப்பு சோதனை

பெரிய சூரியூா் புதிய மைதானத்தில் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு

கிருஷ்ணகிரியில் தீண்டாமை ஒழிப்பு: முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT