முகப்பு
இந்தியா

உ.பி.யில் காலை 11 மணி நிலவரப்படி 22.62 % வாக்குகள் பதிவு

உத்தரப் பிரேதசத்தில் நடந்துவரும் நான்காம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் 11 மணி நிலவரப்படி 22.62 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:29 AM
பகிர்:

உத்தரப் பிரேதசத்தில் நடந்துவரும் நான்காம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் 11 மணி நிலவரப்படி 22.62 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 

உத்தர பிரதேசத்தில் இதுவரை 3 கட்டத் தோ்தல்கள் நிறைவடைந்துள்ளன. 4-ஆவது கட்டமாக 9 மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு தொடங்கி  நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், இன்று காலை 11 மணி நிலவரப்படி 22.62 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. காலை 9 மணிக்கு 9.10 சதவீத வாக்குகள் பாதிவானது குறிப்பிடத்தக்கது. 

பண்டா 23.85 சதவீதம், ஃபதேபூர் 22.49 சதவீதம், ஹர்டோய் 20.27 சதவீதம், கெரி 26.29 சதவீதம், லக்னோ 21.42 சதவீதம், பிலிபித் 27.43 சதவீதம், ரேபரேலி 21.41 சதவீதம், சீதாபூர் 21.79 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.