ஸ்ரீநகரில் கடும் பனிப்பொழிவு: ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடல்
காஷ்மீர் பள்ளத்தாக்கின் பெரும்பாலான பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் மக்களின் இயல்வு வாழ்க்கை முடங்கியுள்ளது.
காஷ்மீர் பள்ளத்தாக்கின் பெரும்பாலான பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் மக்களின் இயல்வு வாழ்க்கை முடங்கியுள்ளது.
பள்ளத்தாக்கின் பெரும்பாலான பகுதிகள் மிதமான முதல் கடுமையான பனிப்பொழிவு இருந்தது. யூனியன் பிரதேசத்தின் உயரமான பகுதிகள் இரண்டு அடிக்கு மேல் மிகக் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டன.
ஸ்ரீநகரில் இன்று காலை வரை சுமார் 8 அடிக்கு மேல் பனிப்பொழிவு பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மோசமான வானிலை காரணமாக விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன. ஸ்ரீநகர் விமான நிலையத்தில் குறைந்தது 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ளவை தாமதமாகியுள்ளன.
ரயில் தண்டவாளத்தில் பனிப்பொழிவு காரணமாக பாரமுல்லா மற்றும் பனிஹால் இடையேயான ரயில் சேவை இன்று காலை நிறுத்தப்பட்டுள்ளது,
பனிப்பொழிவைத் தவிர, பலத்த மழை பெய்ததால் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. நெடுஞ்சாலையின் இருபுறமும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், சாலையில் உள்ள பனி மற்றும் கற்களை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
புதன்கிழமை பிற்பகலிலிருந்து படிப்படியாக மழை மற்றும் பனிப்பொழிவு குறையும் என்றும், வானிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பனிப்பொழிவு காரணமாக, காஷ்மீர் பல்கலைக்கழகம் அனைத்து தேர்வுகளையும் நாளை ஒத்திவைத்தது.