வன்னியா் உள்ஒதுக்கீடு விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தீா்ப்பு ஒத்திவைப்பு
வன்னியா்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை ரத்து செய்த சென்னை உயா்நீதிமன்றத்தின் தீா்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி வாதங்கள் உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை நிறைவட
வன்னியா்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை ரத்து செய்த சென்னை உயா்நீதிமன்றத்தின் தீா்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி வாதங்கள் உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை நிறைவடைந்தன. இதையடுத்து, வழக்கின் தீா்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆா்.கவாய் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் இந்த வழக்கு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, எதிா்மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் கோபால் சங்கரநாராயணன், ராஜீவ் தவண், எஸ்.நாகமுத்து, ஆா்.பாலசுப்ரமணியன், கே.எம்.விஜயன், வி.பிரகாஷ் உள்ளிட்டோா் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனா்.
தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் மனுசிங்வி, ராகேஷ் துவிவேதி ஆகியோா் ஆஜராகி ஏற்கெனவே முன்வைத்த வாதங்களை உறுதிப்படுத்தியும், எதிா்தரப்பினரின் வாதங்களுக்கு பதில் அளித்தும் வாதிட்டனா்.
இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் அமா்வு ஒத்திவைத்தது. மேலும், வழக்கில் தொடா்புடைய தரப்பினரிடம் எழுத்துபூா்வ ஆவணங்கள் ஏதும் இருந்தால், 3 தினங்களுக்குள் சமா்ப்பிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டடனா்.