இந்தியா

கரோனா: நாட்டில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,48,359 ஆகக் குறைந்தது

DIN

புது தில்லி : நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,148 பேருக்கு தொற்று உறுதி செய்ப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 4,28,81,179 ஆகவும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,48,359 ஆகவும் குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரங்கள் குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத் துறை தினசரி வெளியிட்டு வருகின்றது. இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள தகவலின்படி,

நாட்டில் புதிதாக 14,148 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 302 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,12,924 -ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.20 சதவிகிதமாக குறைந்துள்ளது.

நேற்று ஒரேநாளில் 30,009 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,22,19,896 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.46 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. தற்போது 1,48,359 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தினசரி தொற்று பாதிப்பு தொடர்ந்து 18 ஆவது நாளாக ஒரு லட்சத்திற்கும் குறைவாகவே உள்ளது.

கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.35 சதவிகிதமாகவும் குறைந்துள்ளது. 

நாடு முழுவதும் இதுவரை 1,76,52,31,385 கோடி கரோனா டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 30,49,988 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

SCROLL FOR NEXT