இந்தியா

புதினுடன் பேசுகிறாரா பிரதமர் மோடி?

DIN


உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், விளாதிமீர் புதினுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்றிரவு (வியாழக்கிழமை) பேசவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஷியா போர் தொடுத்துள்ள விஷயத்தில் இந்தியா தலையிட வேண்டும் என இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகோர் போலகா கோரிக்கை விடுத்தார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:

"மோடி மிகவும் சக்திவாய்ந்த, மரியாதைக்குரிய உலகத் தலைவர்களில் ஒருவர். ரஷியாவுடன் உங்களுக்கு சிறப்பான மற்றும் வியூக ரீதியான உறவு உள்ளது. மோடி புதினிடம் பேசினால், அவர் பதிலளிப்பார் என நம்புகிறோம்" என்றார்.

இந்த நிலையில், ரஷிய அதிபரி விளாதிமீர் புதினுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்றிரவு பேசவுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கு மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு தில்லியில் நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT