காஷ்மீரில் பனிப்பொழிவு: 2வது நாளாக விமான சேவை பாதிப்பு
காஷ்மீரில் நிலவிவரும் பனிப்பொழிவு காரணமாக தொடர்ந்து இரண்டாவது நாளாக விமானச் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஷ்மீரில் நிலவிவரும் பனிப்பொழிவு காரணமாக தொடர்ந்து இரண்டாவது நாளாக விமானச் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜம்மு-காஷ்மீரில் கடந்த இரண்டு நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருவதையடுத்து, மக்களின் இயல்வு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக ஸ்ரீநகர் விமான நிலையத்தில் எந்த விமானப் போக்குவரத்தும் நடைபெறவில்லை.
விமானநிலையத்தின் தெரிவுநிலை சுமார் 800 மீட்டராக இருந்தது. இதனால் விமானச் செயல்பாடுகளுக்குத் தேவையான தெரிவுநிலை குறைவாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால், அனைத்து விமானங்களும் தாமதமாகின்றன. ஒருசில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தெரிவுநிலையில் முன்னேற்றம் ஏற்பட்டவுடன் விமானச் செயல்பாடுகள் தொடங்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக, கடந்த புதன்கிழமை தெரிவுநிலை மிகவும் மோசமாக இருந்த நிலையில் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.