காஷ்மீர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீரில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
காஷ்மீரில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு - காஷ்மீரின் ஷோபியன் மாவட்டம் அம்ஷிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த பாதுகாப்புப் படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பாதுகாப்புப் படையினர் தரப்பிலும் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
Advertisement
பலியான தீவிரவாதிகளிடமிருந்து துப்பாக்கிகள், வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.