இந்தியா

அயோத்தி ராமர் கோயிலுக்குச் சென்றார் யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் சென்று ஆய்வு மேற்கொண்டார். 

DIN

உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் சென்று வழிபாடு செய்தார். 

403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு பிப். 10-ஆம் தேதி முதல் மார்ச் 7 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது.

இதில், நான்கு கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், 5, 6, 7 ஆம் கட்ட வாக்குப்பதிவுகள் முறையே பிப்.27, மார்ச் 3, மார்ச் 7 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கின்றன. மார்ச் 10 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. 

இந்நிலையில், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் வெள்ளிக்கிழமை சென்று வழிபாடு செய்தார். பாஜக தேசியத் தலைவர் ஜெபி நட்டாவும் அவருடன் சென்றார். 

பின்னர் முதல்வர் அங்கு ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT