முகப்பு
கோப்புப்படம்
இந்தியா

ருமேனியா புறப்பட்டது ஏர் இந்தியா விமானம்

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ருமேனியா தலைநகர் புகாரெஸ்டுக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று அதிகாலை 3.40 மணிக்குப் புறப்பட்டது.

இந்தியா

ருமேனியா புறப்பட்டது ஏர் இந்தியா விமானம்

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ருமேனியா தலைநகர் புகாரெஸ்டுக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று அதிகாலை 3.40 மணிக்குப் புறப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:31 AM
கோப்புப்படம்
பகிர்:

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ருமேனியா தலைநகர் புகாரெஸ்டுக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று அதிகாலை 3.40 மணிக்குப் புறப்பட்டது.

இதுபற்றிய அரசு மூத்த அலுவலர்கள் கூறியதாவது:

"மும்பை விமான நிலையத்திலிருந்து காலை 3.40 மணியளவில் விமானம் புறப்பட்டது. இந்திய நேரப்படி புகாரெஸ்ட் விமான நிலையத்துக்கு காலை 10 மணியளவில் விமானம் சென்றடையும்.

சாலை மார்க்கமாக உக்ரைன்-ருமேனியா எல்லை வந்தடைந்த இந்தியர்கள் இந்திய அரசு அதிகாரிகள் மூலம் புகாரெஸ்ட் அழைத்துச் செல்லப்படவுள்ளனர். அங்கிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் அவர் இந்தியாவுக்கு வரவுள்ளனர்."

இதுதவிர மேலும் சில ஏர் இந்தியா விமானங்கள் ருமேனியா, ஹங்கேரிக்கு இயக்கப்படவுள்ளன.

முன்னதாக, புகாரெஸ்டுக்கு 2 விமானங்கள் வெள்ளிக்கிழமை இரவு இயக்கப்படும் என்று ஏர் இந்தியா அறிவித்திருந்தது. ஆனால், அவை திட்டமிட்டபடி புறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →