இந்தியா

உ.பி. பேரவைத் தேர்தல்: மாலை 5 மணி நிலவரப்படி 53.98% வாக்குப்பதிவு

DIN

உத்தரப் பிரதேசத்தில் பேரவைத் தேர்தலின் 5ஆம் கட்ட வாக்குப்பதிவில் மாலை 5 மணி நிலவரப்படி 53.98 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

உத்தர பிரதேசத்தில் 403 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் பிப்.10 முதல் மாா்ச் 7-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. ஏற்கெனவே 4 கட்ட தோ்தல் நிறைவடைந்துள்ள நிலையில், 5-ஆம் கட்டமாக 61 தொகுதிகளுக்கு இன்று வாக்குபதிவு நடைபெற்றது.

மக்கள் ஆர்வமுடன் தங்களது ஜனநாயக் கடமையை ஆற்றினர். 5ஆம் கட்ட வாக்குப்பதிவில் மாலை 5 மணி நிலவரப்படி 53.98 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

காங்கிரஸின் கோட்டையாக ஒருகாலத்தில் கருதப்பட்ட அமேதி, ரேபரேலி, ராமா் கோயில் கட்டப்படும் அயோத்தி ஆகிய தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போஸ்டர் ஒட்டுவதில் தகராறு: பாஜக தொண்டர் கொலை!

‘மின்னும் பேரொளி’ சான்யா மல்ஹோத்ரா...!

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: ஜூலை 10-க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு ஜூலை 10-க்கு ஒத்திவைப்பு!

கோபா அமெரிக்காவின் தீம் பாடல்!

SCROLL FOR NEXT