இந்தியா

மணிப்பூரில் காலை 9.30 மணி நிலவரப்படி 8.94% வாக்குகள் பதிவு

மணிப்பூரில் முதல்கட்டத் தேர்தலில் காலை 9.30 மணி நிலவரப்படி 8.94% வாக்குகள் பதிவாகியுள்ளன. 

DIN

மணிப்பூரில் முதல்கட்டத் தேர்தலில் காலை 9.30 மணி நிலவரப்படி 8.94% வாக்குகள் பதிவாகியுள்ளன. 

மணிப்பூரில் முதல்கட்டமாக 6 மாவட்டங்களில் உள்ள 38 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் காலை முதலே வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். காலை 9.30 மணி நிலவரப்படி 8.94% வாக்குகள் பதிவாகியுள்ளன. 15 பெண்கள் உள்பட 173 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.  மாநில முதல்வா் பிரேன் சிங், பேரவைத் தலைவா் ஒய்.கேம்சந்த், துணை முதல்வா் ஒய்.ஜாய்குமாா் உள்ளிட்டோா் தோ்தல் களத்தில் உள்ளனா்.

மாலை 4 மணிக்கு நிறைவடைகிறது. தோ்தல் சுதந்திரமாக நடைபெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.  பதற்றம் நிறைந்ததாகக் கருதப்படும் வாக்குச் சாவடிகளில் பாதுகாப்புப் படையினா், காவல் துறையினா் குவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். கரோனா தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு வாக்குச் சாவடிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

வாக்காளா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதோடு, வாக்காளா்களுக்குக் கையுறையும் வழங்கப்படுகிறது. மாநிலத்தில் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. ஆட்சியில் இருந்து பாஜகவை அகற்றுவதற்காக 6 கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அகழாய்வு தளத்தைப் பார்வையிட்ட முதல்வர் Stalin!

பூண்டி வெள்ளியங்கிரி கோயிலில் பக்தர்களை அலறவிட்ட ஒற்றை யானை!

விஜய் அரசியலில் நடிக்க அமித் ஷாவுடன் ஒப்பந்தம்: பேரவைத் தலைவா் மு.அப்பாவு

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் மல்லிகார்ஜுன கார்கே!

மழையினால் கைவிடப்பட்ட 2-ஆவது டி20: 8 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தும் ஆஸி.!

SCROLL FOR NEXT