கூகுள் பிளே பாஸ் இந்தியாவில் அறிமுகம்: முழு விவரம் 
இந்தியா

கூகுள் பிளே பாஸ் இந்தியாவில் அறிமுகம்: முழு விவரம்

பிளே பாஸ் சந்தா வசதியை இந்தியாவிலும்  கொண்டு வந்திருப்பதாக திங்கள்கிழமை கூகுள் அறிவித்துள்ளது.

DIN


பிளே பாஸ் சந்தா வசதியை இந்தியாவிலும்  கொண்டு வந்திருப்பதாக திங்கள்கிழமை கூகுள் அறிவித்துள்ளது.

இந்தியாவில், ஆன்டிராய்டு செல்லிடப்பேசிகளில், மாதம் ரூ.99 அல்லது ஆண்டுக்கு ரூ.889 செலுத்தி கூகுள் பிளே பாஸ் சப்ஸ்கிரிப்ஷன் செய்து கொள்ளலாம்.

இதன் மூலம் பல முக்கிய செயலிகள், செல்லிடப்பேசி கேம்களை எந்த விளம்பரமோ, கூடுதல் கட்டணமோ இல்லாமல் பயனாளர்கள் பயன்படுத்த முடியும்.

மாத அல்லது ஆண்டுச் சந்தா செலுத்தி, கூகுள் பிளே பாஸ் சப்ஸ்கிரிப்ஷன் சேவையை பெறுவோர், ஆன்டிராய்டு செல்லிடப்பேசிகளில் சுமார் 1000க்கும் மேற்பட்ட செயலிகள், 41 வகைகளில் விளையாட்டுச் செயலிகளை எவ்வித விளம்பரமும் இன்றி பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இந்தியாவில், கூகுள் பிளே பாஸ் சேவையை மிகுந்த உற்சாகத்துடன் அறிமுகப்படுத்தும் அதே வேளையில், மேலும் பல உள்ளூர் டெவலப்பர்களின் பங்களிப்பும் அதிகரிக்கும் என்று எதிர்பைர்ப்பதாக கூகுள் இந்தியாவின், பிளே பார்ட்னர்ஷிப்ஸ் இயக்குநர் ஆதித்யா சுவாமி கூறுகிறார்.

இதில், ரூ.109 செலுத்தியும், ஒரு மாதத்துக்கான ப்ரீ-பெய்டு சந்தாவை பெறலாம்.

இந்த வாரத்தில், ஆண்டிராய்டு செல்லிடப்பேசி பயனாளிகளுக்கு பிளே ஸ்டோர் செயலியில் பிளே பாஸ் சேவை கிடைக்கும் என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிட்வா புயல்: நிவாரண நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஆய்வு!

எதிர்க்கட்சிகள் அமளி! மக்களவை நாளைவரை ஒத்திவைப்பு!

சென்னையை நோக்கி வரும் மேகக் கூட்டங்கள்! அடுத்த 2 மணி நேரத்துக்கு கவனம்

வண்ண நிலவே... அனுபமா!

பட்டமாக பறக்கிறேன்... சுஷ்ரி மிஸ்ரா

SCROLL FOR NEXT