முகப்பு
இந்தியா

உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்பதற்கான செயல் திட்டத்தை வெளியிட வேண்டும்: ராகுல் காந்தி 

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கான விரிவான திட்டத்தை மத்திய அரசு வெளியிட வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:32 AM
ராகுல் காந்தி
பகிர்:

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கான விரிவான திட்டத்தை மத்திய அரசு வெளியிட வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷியா கடந்த வியாழக்கிழமை போா் தொடுத்தது. இதனால், அங்கு தவிக்கும் இந்தியா்களை மீட்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.  உக்ரைன் வான்வெளியில் சா்வதேச விமானப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டதால், ரோமானிய தலைநகா் புகாரெஸ்ட், ஹங்கேரி தலைநகா் புடாபெஸ்ட் வழியாக இந்திய மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

உக்ரைனிலிருந்து இதுவரை 1,156 இந்தியா்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனா். இந்த நிலையில் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கான விரிவான திட்டத்தை மத்திய அரசு வெளியிட வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும் இந்திய மாணவர்கள் தாக்கப்படும் விடியோவை பார்க்கும்போது மனம் வேதனை அடைவதாகவும், இந்த மாதிரியான விடியோவை பார்க்கும் நிலை எந்த பெற்றோருக்கும் வரக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சொந்த மக்களை கைவிடக் கூடாது என குறிப்பிட்ட அவர் எல்லையில் உக்ரைன் வீரர்களால் இந்தியர்கள் தாக்கப்படுவது போன்ற விடியோவையும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →