இந்தியா

உ.பி.யில் மருத்துவர் மீது துப்பாக்கிச் சூடு: மூவர் கைது 

DIN

உத்தரப் பிரேசத்தின் பரேலியில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியின் இயக்குனரும், அறுவை சிகிச்சை நிபுணருமான டி.கேசவ் அகர்வாலை துப்பாக்கியால் சுட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

நிலத் தகராறு வழக்கில் அகர்வாலை மிரட்டியதாக, தாக்குதல் நடத்தியவர்கள் தெரிவித்தனர்.  சனிக்கிழமை இரவு பரதாரி பகுதியில் உள்ள ரயில்வே கிராசிங்கில், இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் அவரை வழிமறித்து துப்பாக்கியால் சுட்டனர். 

இதனால், தோட்டா அவரது தாடை வழியாகச் சென்றது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். 

இதுகுறித்து தலைமை ஆய்வாளர் ரேஹித் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், 

மருத்துவர் அகர்வால் தனது மருத்துவக் கல்லூரி அருகே அனீஸ் அலி என்பவரிடம் இருந்து கடந்த 2017ல் நிலம் ஒன்றை வாங்கியுள்ளார். பின்னர், அதே இடத்தை அனீஸ் அலி வேறொருவருக்கு விற்றதை மருத்துவர் கண்டுபிடித்தார். 

இதையடுத்து, அவர் கைதுசெய்யப்பட்டார். கடந்த 2019ஆம் ஆண்டில் அனீஸ் மருத்துவரிடம் பணம் பறிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. மேலும்,  அவருக்கு எதிராக மற்றொரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று மருத்துவரை சுட்டுக்கொள்ள நான்கு பேரை அலி அனுப்பியுள்ளார் என்பது தெரியவந்தது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT