கோப்புப்படம் 
இந்தியா

இந்திய மாணவர்களை விரைந்து மீட்க அமைச்சர் ஜெய்சங்கரிடம் சரத் பவார் கோரிக்கை

உக்ரைன் மற்றும் அண்டை நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். 

DIN

உக்ரைன் மற்றும் அண்டை நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். 

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலை அடுத்து அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உக்ரைனிலிருந்து 5 ஏா் இந்தியா விமானங்கள் மூலமாக இதுவரை 1,156 இந்தியா்கள் தாயகம் திரும்பியுள்ளனர். 

உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்கும் பணிகளை துரிதப்படுத்தும் வகையில் போலாந்து, ரோமானியா,  ஹங்கேரி, ஸ்லோவேக்கியா ஆகிய நாடுகளில் 24*7 கட்டுப்பாட்டு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் உக்ரைனின் கார்கிவ் பகுதியில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்பது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தொலைபேசி வாயிலாக இன்று பேசியுள்ளார். 

இந்தியர்களை ரஷியாவின் பெல்கோரோட்(Belgorod ) வழியாகவும், ரோமானியா- போலந்து எல்லையில் சிக்கியுள்ள மாணவர்களை  மீட்பது குறித்தும் அவர் பேசியுள்ளார். மாணவர்களை விரைந்து அழைத்து வர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குளிர் அலை: அதிகாலையில் நடைப்பயிற்சி வேண்டாமே! செய்யக்கூடாதவை..

புதுச்சேரியிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 3,000 பொங்கல் பரிசு! ஆனால்...

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ.90.16ஆக நிறைவு!

விஜய்யிடம் சிபிஐ விசாரணை நிறைவு!

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணமா? இந்த எண்களில் புகார் அளியுங்கள்!

SCROLL FOR NEXT