நரேந்திர மோடி (கோப்புப் படம்) 
இந்தியா

உக்ரைன் போர்: 24 மணி நேரத்தில் 3வது முறையாக மோடி ஆலோசனை

உக்ரைன் போர் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி உயர்மட்டக் குழுவுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

DIN

உக்ரைன் போர் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி உயர்மட்டக் குழுவுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். உக்ரைன் விவகாரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3வது முறையாக உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பாக ஏற்கெனவே இரண்டு முறை ஆலோசனை நடைபெற்றது. அதன் விளைவாக உக்ரைன் எல்லைகளில் 24 மணிநேரம் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டன. 

தற்போது வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதில் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையை ஒருங்கிணைக்கும் வகையில் மத்திய அமைச்சர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளுக்குச் செல்லவுள்ளனர். 

இதில் ஹர்தீப் சிங் புரி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜூ, வி.கே.சிங் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

2022 பிப்ரவரி 28 (இரவு 7 மணி) நிலவரப்படி இதுவரை உக்ரைனில் இருந்து 1,156 பயணிகளை ஏற்றிக்கொண்டு 5 விமானங்கள் (மும்பையில் ஒன்று, தில்லியில் நான்கு) வந்துள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதருக்குள் விழுந்த தனியார் ஜெட்! பத்திரமாக மீட்கப்பட்ட பயணிகள்! | UP

மந்தாரப்பூ... கரீனா கபூர்!

ரோஹித்திடம் இருந்து இதை உள்ளீர்த்துக்கொள்ள வேண்டும்... ஷுப்மன் கில் பேட்டி!

இறுதிக்கட்டத்தில் மெண்டல் மனதில் படப்பிடிப்பு!

விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது!

SCROLL FOR NEXT