இந்தியா

ஜன.4-ல் பிரதமர் மோடி மணிப்பூர், திரிபுரா பயணம்

DIN

பிரதமர் மோடி ஜனவரி 4-ம் தேதி மணிப்பூர், திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். 
முற்பகல் 11 மணியளவில், மணிப்பூர் இம்பாலில் ரூ.4800 கோடி மதிப்பிலான 22 வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, தொடங்கி வைக்கிறார். ரூ.1850 கோடி மதிப்பிலான 13 திட்டங்களை தொடங்கி வைப்பதுடன், ரூ.2950 கோடி மதிப்பிலான 9 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 

சாலை கட்டமைப்பு, குடிநீர், சுகாதாரம், நகர்ப்புற வளர்ச்சி, தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு, கலை மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இத்திட்டங்கள் அடங்கும். 
சுமார் ரூ.1100 கோடி செலவில் கட்டப்பட்ட 2350-க்கும் மேற்பட்ட மொபைல் கோபுரங்களையும் பிரதமர் மணிப்பூர் மக்களுக்கு அர்ப்பணிக்கிறார். பின்னர், பிற்பகல் 2 மணியளவில், திரிபுரா மாநிலம் அகர்தலாவில், மகாராஜா பிர் பிக்ரம் விமான நிலையத்தில், ஒருங்கிணைந்த முனைய கட்டடத்தை அவர் தொடங்கி வைக்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மஹாராஷ்டிர மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் - ஷாருக்கான்

குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வஉசியின் கொள்ளுப்பேரன்!

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கல்கி - வில்லனாக கமல்ஹாசன்?

என்ன விலை அழகே... ஸ்ரீமுகி!

SCROLL FOR NEXT