கோப்புப்படம் 
இந்தியா

கர்நாடகத்திலிருந்து மேல்மருவத்தூர் வந்துசென்ற 35 பேருக்கு கரோனா

கர்நாடகத்தில் இருந்து மேல்மருவத்தூர் வந்துசென்ற 35 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

DIN

கர்நாடகத்தில் இருந்து மேல்மருவத்தூர் வந்துசென்ற 35 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இரு தினங்களுக்கு முன்பு, கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் இருந்து 3 பேருந்துகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு வந்துள்ளனர். 

இதில் இரண்டு பேருந்துகள் இன்று கர்நாடகம் திரும்பிய நிலையில் அவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 35 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

மேலும், ஒரு பேருந்து நாளை மண்டியா மாவட்டத்தை வந்தடையும் என்றும் அவர்களுக்கும் முழுமையாக கரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோபோ சங்கர் உடலுக்கு உதயநிதி அஞ்சலி!

அமெரிக்க காவல்துறையால் இந்திய மாணவர் என்கவுன்டர்! நடந்தது என்ன?

‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’: முதல்வரின் ‘எக்ஸ்’தள முகப்பில் புதிய வாசகம்

தமிழக அரசின் தடங்கல்களை விஜய் எதிா்கொள்ளத்தான் வேண்டும்: கே.அண்ணாமலை

பழங்குடியினர் வலி! ராமாயணத்திலிருந்து நவயுகம் வரை... தண்டகாரண்யம் - திரை விமர்சனம்!

SCROLL FOR NEXT