முகப்பு
இந்தியா

அரவிந்த் கேஜரிவாலுக்கு கரோனா

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 4 ஜனவரி, 2022 at 9:29 AM
முதல்வர் அரவிந்த் கேஜரிவால் (கோப்புப் படம்)
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:31 PM


புது தில்லி: தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அரவிந்த் கேஜரிவால், தனக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும், லேசான அறிகுறிகளே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சுட்டுரையில் இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகளே உள்ளன. நான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். கடந்த ஒரு சில நாள்களில் என்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்வதும், கரோனா பரிசோதனை மேற்கொள்வதும் நல்லது என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், தில்லியில் கரோனா பாதிப்பும் அதிகரித்து வருகிறது.

திங்களன்று புது தில்லியில் 4,099 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2021ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி பதிவான 4,482 தொற்று பாதிப்புக்குப் பிறகு பதிவாகும் அதிகபட்ச பாதிப்பாகும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.