முகப்பு
இந்தியா

தில்லியில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படும் விகிதம் 8.37%

தில்லியில் கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் செவ்வாய்க்கிழமை 8.37 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:01 AM
பகிர்:


தில்லியில் கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் செவ்வாய்க்கிழமை 8.37 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.

தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 65,487 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 5,481 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,575 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 3 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

மருத்துவமனைகளில் 531 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து, தில்லியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,63,701 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 14,23,699 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 25,113 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 14,889 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சையில் உள்ளனர்.

திங்கள்கிழமை தரவுகளின்படி தில்லியில் 4,099 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவது 6.46 சதவிகிதமாகப் பதிவானது.

தடுப்பூசி:

கடந்த 24 மணி நேரத்தில் 1,85,595 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். இதுவரை மொத்தம் 2,66,57,832 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தில்லியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.