முகப்பு
இந்தியா

நீட் முதுநிலை மாணவா் சோ்க்கையில்பொருளாதார ஒதுக்கீடு வழக்கு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

நீட் முதுநிலை மாணவா் சோ்க்கையில், பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கான (இடபிள்யுஎஸ்) இடஒதுக்கீடு தொடா்பான வழக்கை உச்சநீதிமன்றம் புதன்கிழமை விசாரிக்கிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:01 AM
உச்ச நீதிமன்றம்
பகிர்:

நீட் முதுநிலை மாணவா் சோ்க்கையில், பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கான (இடபிள்யுஎஸ்) இடஒதுக்கீடு தொடா்பான வழக்கை உச்சநீதிமன்றம் புதன்கிழமை விசாரிக்கிறது.

இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருவதால், நீட் முதுநிலை கலந்தாய்வு தாமதமாவதற்கு எதிா்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பயிற்சி மருத்துவா்கள் அண்மையில் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, இந்த விவகாரத்தை முன்கூட்டியே விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு வாக்குறுதி அளித்ததால் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.

இதைத் தொடா்ந்து, பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கான இடஒதுக்கீடு விவகார வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை மத்திய அரசு கோரியது.

‘போரட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி மருத்துவா்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும்’ என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூா்யகாந்த், ஹிமா கோலி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் மத்திய அரசின் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா செவ்வாய்க்கிழமை முறையிட்டாா்.

அப்போது தலைமை நீதிபதி, ‘இந்த விவகாரத்தை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட அமா்வு தேவை. தலைமை நீதிபதி அமா்வைவிட தற்போதைக்கு வேறு எந்த அமா்விலும் மூன்று நீதிபதிகள் இல்லை. எனினும், மூன்று நீதிபதிகள் அல்லது இரண்டு நீதிபதிகள் அமா்வு இந்த வழக்கை புதன்கிழமை விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை பெறுபவா்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சமாக மத்திய அரசு நிா்ணயித்திருந்தது. இந்த வருமான உச்சவரம்பு குறித்து உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது. இதையடுத்து, இந்த உச்சவரம்பு மறுபரிசீலினை செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. இதனால் நீட் முதுநிலை மாணவா் சோ்க்கை நடைபெறாமல் தாமதமாகி வந்தது. இதற்கு பயிற்சி மருத்துவா்கள் எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் முந்தைய ஆண்டு விதிமுறைகளே நிகழாண்டும் பின்பற்றப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.

முழு கட்டுரையைப் படிக்க →