முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 75 பேருக்கு ஒமைக்ரான்

மகாராஷ்டிரத்தில் மேலும் 75 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:01 AM
கோப்புப்படம்
பகிர்:


மகாராஷ்டிரத்தில் மேலும் 75 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 18,466 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 20 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். 4,558 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 67,30,494 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 65,18,916 பேர் குணமடைந்துள்ளனர்.

ஒமைக்ரான்:

மேலும் 75 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, ஒமைக்ரான் வகை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 653 ஆக உயர்ந்துள்ளது. இதில் 259 பேர் குணமடைந்துவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.