இந்தியா

காஷ்மீரில் தொடரும் துப்பாக்கிச்சூடு: 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

காஷ்மீரில் கடந்த 3 நாட்களில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 

DIN

காஷ்மீரில் கடந்த 3 நாட்களில் நான்கு முறை நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்புப் படையினரால் 3 ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

புல்வாமா மாவட்டம் சந்த்கம் கிராமத்தில் பயங்கரவாதிகள் இருப்பதாக வந்த தகவலின்பேரில், சிஆர்பிஎஃப்  மற்றும் ராணுவம் இணைந்து  தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதற்குப் பதில் தாக்குதல் நடத்தியதில் 3 ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட காஷ்மீரில் மூன்று நாட்களில் நடந்த 4-வது துப்பாக்கிச்சூடு இதுவாகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு! 2 குழந்தைகள் பலி; 17 பேர் படுகாயம்!

தினம் தினம் திருநாளே!

திருவள்ளூரில் போதை மாத்திரைகள் விற்றதாக 5 போ் கைது

பெரம்பலூா் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழா!

அதிமுகவை ஆா்எஸ்எஸ் வழிநடத்துவதில் என்ன தவறு? மத்திய இணையமைச்சா் எல்.முருகன் கேள்வி

SCROLL FOR NEXT