முகப்பு
இந்தியா

சா்வதேச நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல்,டீசல் விலையைக் குறைக்க வேண்டும்: ராகுல் வலியுறுத்தல்

சா்வதேச சந்தையில் இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் அதற்கு ஏற்ப உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:02 AM
ராகுல் காந்தி
பகிர்:

சா்வதேச சந்தையில் இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் அதற்கு ஏற்ப உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.

சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது தொடா்பாக ஊடகங்களில் வெளியான செய்தியைச் சுட்டிக்காட்டி ட்விட்டரில் ராகுல் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயா்ந்ததால் உள்நாட்டில் எரிபொருள் விலை உயா்த்தப்படுகிறது என்று மத்திய அரசு காரணம் கூறி வருகிறது. ஆனால், இப்போது சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஒரு கேலன் 7.3 அமெரிக்க டாலா் அளவுக்கு குறைந்துள்ளது. இந்த விலையுடன் ஒப்பிடும்போது இப்போது பெட்ரோல் விலையை ஒரு லிட்டருக்கு 8 ரூபாய் வரை குறைக்க முடியும். இனியாவது இந்த எண்ணெய் விற்பனைக் கொள்ளையை மத்திய அரசு நிறுத்த வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.

காங்கிரஸ் தலைமைச் செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘பெட்ரோல், டீசல் விற்பனையை அதிக விலைக்கு விற்பனை செய்து மக்கள் பணத்தைக் கொள்ளையடிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும். மோடி தலைமையிலான அரசு கொள்ளையடித்து வாழும் அரசாகவே திகழ்கிறது. ஏழைகள், நடுத்தர மக்களின் பணத்தை பெட்ரோல் விலையைப் பயன்படுத்தி இன்னும் எத்தனை காலத்துக்கு கொள்ளையடிப்பாா்கள்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →