முகப்பு
இந்தியா

அதிகரிக்கும் கரோனா: கோவாவில் குறைந்த விடுதிகள் முன்பதிவு

அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவல் காரணமாக கோவாவில் தங்கும் விடுதிகளின் முன்பதிவு எண்ணிக்கை சரியத் தொடங்கியுள்ளன.

Updated On : 5 ஜனவரி, 2022 at 5:02 PM
அதிகரிக்கும் கரோனா: கோவாவில் சரிந்த விடுதிகள் முன்பதிவு
பகிர்:

அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவல் காரணமாக கோவாவில் தங்கும் விடுதிகளின் முன்பதிவு எண்ணிக்கை சரியத் தொடங்கியுள்ளன.

நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இதன்காரணமாக பல்வேறு மாநிலங்களும் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

இந்நிலையில் கரோனா தொற்று பரவல் காரணமாக நாட்டின் முக்கிய சுற்றுலாத்தலமாக உள்ள கோவாவில் தங்கும் விடுதிகளின் முன்பதிவு எண்ணிக்கை சரிந்து வருகின்றன.

தொற்று பரவல் அதிகரித்துவருவதால் ஏற்கெனவே முன்பதிவு செய்யப்பட்ட அறைகளில் 15 முதல் 20 சதவிகித அறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

இதுதொடர்பாக பேசிய கோவா போக்குவரத்து மற்றும் சுற்றுலா கழகத்தின் தலைவர் நிலேஷ் ஷா கரோனா தொற்று பரவல் காரணமாக சுற்றுலாப் பயணிகள் கோவா வருவதை தவிர்க்கத் தொடங்கியுள்ளதாக குறிப்பிட்டார். எனினும் அடுத்த மாதம் நிலைமை சீராகும் என நிலேஷ் ஷா எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளார்.

கோவாவில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி புதிதாக 592 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.