முகப்பு
இந்தியா

மத்திய பிரதேசம்: கிடங்கில் பதுக்கிய16,200 கிலோ கஞ்சா பறிமுதல்

மத்திய பிரதேசத்தில் கிடங்கு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 16,200 கிலோ கஞ்சாவை போலீஸாா் கைப்பற்றினா். இது தொடா்பாக 5 பேரை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:02 AM
பகிர்:

மத்திய பிரதேசத்தில் கிடங்கு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 16,200 கிலோ கஞ்சாவை போலீஸாா் கைப்பற்றினா். இது தொடா்பாக 5 பேரை கைது செய்தனா்.

இந்தூரில் விஸ்வகா்மா நகா் பகுதியில் உள்ள கிடங்கில் அதிக அளவில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் துறையின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினா் அங்கு சென்று விசாரணை நடத்தினா். அப்போது, கிடங்கில் ஆயுா்வேத மருந்துகளைத் தயாரிப்பதற்கான மூலப்பொருள்களை வைத்திருப்பதாக அங்கிருந்தவா்கள் தெரிவித்தனா். அதே நேரத்தில் அவா்கள் கிடங்கு நடத்துவது தொடா்பான எந்த உரிமமும் பெறவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, உள்ளே சென்று காவல் துறையினா் சோதனை நடத்தினா். கிடங்கில் பல்வேறு பகுதிகளிலும் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது சோதனையில் தெரியவந்தது. அவை அனைத்தையும் காவல் துறையினா் கைப்பற்றினா். மொத்தமாக 16,200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக 5 போ் கைது செய்யப்பட்டனா். கஞ்சாவை கடத்த பயன்படுத்தி வந்த ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

அந்தக் கிடங்கில் இருந்துதான் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் கஞ்சாவை அவா்கள் விநியோகித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின்கீழ் அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.