முகப்பு
இந்தியா

உ.பி.யில் சாலை விபத்து: இருவர் பலி

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ராம்பூர்போஜ் கிராமம் அருகே மினி லாரியும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்தனர்.

Updated On : 5 ஜனவரி, 2022 at 11:25 AM
பகிர்:

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ராம்பூர்போஜ் கிராமம் அருகே மினி லாரியும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்தனர் என்று காவல் துறையினர் தெரிவித்தனர். 

இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், 
பிரகாஷ் யாதவ் (25), அவரது தம்பி கன்ஷியாம் (30) ஆகியோர் செவ்வாய்க்கிழமை மாலை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, மினி லாரி மீது மோதியது.

விபத்தில் காயமடைந்தவர்களை கிராம மக்கள், மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், ஆனால் அங்கு அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

Advertisement

மேலும் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.