இந்தியா

தில்லியில் ஒரே நாளில் 15,097 பேருக்கு கரோனா பாதிப்பு

DIN

தில்லியில் ஒரே நாளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தலைநகர் தில்லியில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. 

இந்நிலையில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட கரோனா தொற்று பாதிப்பு நிலவரப்படி புதிதாக 15,097 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1489463 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் தொற்றால் பலியாகியுள்ளனர். இதுவரை தில்லியில் கரோனாவால் 25127 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது 31,498 பேர் தொற்று பாதிப்பிற்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். தில்லியில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் விகிதம் 15.34 சதவிகிதமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT